பக்கம் எண் :

406திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



182. பொருளார்தரு மறையோர்புகழ்

விருத்தர்பொலிமலிசீர்த்

தெருளார்தரு சிந்தையொடு

சந்தம்மலர்பலதூய்

மருளார்தரு மாயன்னயன்

காணார்மயலெய்த

இருளார்தரு கண்டர்க்கிடம்

இடும்பாவனமிதுவே. 9

__________________________________________________

தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.

கு-ரை: தேர் ஆர்தரு - ஆகாயத்தின்கண்ணே அமர்ந்து வந்து. அரக்கன் - இராவணன். ஓராது - ஆராயாமல், அரக்கனாகிய ஆர்த்தானது முடி பத்தினையும் நெரித்து என இயைத்துப் பொருள் காண்க.

வாள் - சந்திரகாசம். குணநாமம் - அழுகைக் குணத்தால் வந்த பெயராகிய இராவணன் என்பது.

9. பொ-ரை: தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத் தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.

கு-ரை: பொருளார் தரும் மறை - பொருள் நிறைந்த வேதம். புகழ் விருத்தர் - புகழால் பழையவர்கள். தெருள் - தெளிவு.

மருளார் தருமாயன் அயன் - தாமே தலையென்னும் தருக்கு நிறைந்த அவரிருவரும். இருளார்தரு - இருளையொத்த. மலர்பல தூய்(தொழும்) இடம் இடும்பாவனம் என ஒருசொல் வருவித்து முடிக்க.