183. தடுக்கையுட னிடுக்கித்தலை
பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள்
உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல்
மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம்
இடும்பாவன மிதுவே. 10
184. கொடியார்நெடு மாடக்குன்ற
ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு
மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள்
அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப்
பறையும் வினைதானே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: பனை ஓலையால் செய்த
தடுக்கைத் தம் கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள
உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும்
சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து
திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம்
நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர்
போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல்
வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின்
கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.
கு-ரை: தடுக்கு - பனையோலை மணை.
இடுக்கி - தமது அக்குளுள் அடக்கி. உடுக்கை பல துவர்க்கூறைகள்
உடம்பு இட்டு - உடுத்துவனவாகப் பல காவியாடைகளை
உடம்பில் பூண்டு. மடுக்கள் - ஆழமான நீர்நிலைகள்.
இடுக்கண் - துன்பம்.
11. பொ-ரை: கொடிகள் கட்டிய
நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு
கூடிய அழகிய கடல் தன்
|