பக்கம் எண் :

 18. திருநின்றியூர்411



187. பறையின்னொலி சங்கின்னொலி

பாங்காரவு மார

அறையும்மொலி யெங்கும்மவை

யறிவாரவர் தன்மை

நிறையும்புனல் சடைமேலுடை

யடிகள்நின்றி யூரில்

உறையும்மிறை யல்லதென

துள்ளம் உணராதே. 3

188. பூண்டவ்வரை மார்பிற்புரி

நூலன்விரி கொன்றை

ஈண்டவ்வத னோடும்மொரு

பாலம்மதி யதனைத்

தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு

நின்றியது தன்னில்

ஆண்டகழல் தொழலல்லது

அறியாரவ ரறிவே. 4

__________________________________________________

3. பொ-ரை: பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.

கு-ரை: பாங்குஆரவும் - பக்கங்களில். மிகவும் - அறையும் ஒலி மிக அடித்தலால் உண்டாகும் (ஏனைய) ஒலிகள். இவை தோற்கருவி ஒலிகள். அறிவார் அடிகள் இறை அவர் தன்மையல்லது உள்ளம் உணராது என முடிக்க. எங்கும் அவையறிவார் - எவரும் அவ்வொலியினை அறிபவர், என் உள்ளம் உணராது என்பது எங்குங்காண்பது அவனுருவே ஆதலின்.

4. பொ-ரை: அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரி நூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும்