189. குழலின்னிசை வண்டின்னிசை
கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்
சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வல னங்கையது
வேந்தியன லாடும்
கழலின்னொலி யாடும்புரி
கடவுள்களை கண்ணே. 5
_________________________________________________
சூடி, வானத்தைத் தீண்டும்
பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி,
நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத் தொழுதல்
அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.
கு-ரை: பூண்டவரை மார்பு - அணிகளைப்பூண்ட
மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை -
விரித்தல் விகாரம்.
ஈண்ட - செறிய. கொன்றை ஈண்ட மதி
அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றி
எனக் கூட்டுக. திருவடியைத் தொழுதாலல்லது அவர்
அறிவான் அறியார் என ஆன்மாக்கள் அருளே கண்ணாகக்
காணும் ஆற்றல் விளக்கியவாறு.
5. பொ-ரை: குழலிசை வண்டிசை ஆகியவற்றைக்
கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய
பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை
வலத் திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின்
ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண்
ஆவான்.
கு-ரை: பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும்
பாடத் தோன்றுவதுபோலக் குழலிசையும் வண்டிசையும் கேட்டுக்
குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த
பொழில் - ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை
சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின் நிழலின்
எழில் தாழ்ந்த பொழில் என்பர்.
அழலின் வலன் - வலமாகச் சுற்றியெரியும்
மழு. ஆடும்புரி கடவுள் - ஆடுகின்ற விரும்பத்தக்க
கடவுள். களைகண் - நமக்கு ஆதாரம்.
|