பக்கம் எண் :

414திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



* * * * * 8

192. நல்லம்மலர் மேலானொடு

ஞாலம்மது வுண்டான்

அல்லரென வாவரென

நின்றும்மறி வரிய

நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி

யூரின்னிலை யாரெம்

செல்வரடி யல்லாதென

சிந்தையுண ராதே. 9

193. நெறியில்வரு பேராவகை

நினையாநினை வொன்றை

அறிவில்சமண் ஆதருரை

கேட்டும்மய ராதே

__________________________________________________

கு-ரை: தலை கையினில் பற்றி ஏந்தித் தேரும் பெற்றியது வாகியே திரிகின்ற தேவர் பெருமானார் என இயைக்க. பலி பெற்றியதுவாகி எனவே அப்பெற்றி அவர்க்கு இயல்பன்மையும், தாருகாவனத்து முனிவர்கள்பால் வைத்த தடையிலாக் கருணையே காரணம் என்பதும் வெளிப்படை, சுற்றி - அரையைச் சுற்றி. வேங்கை - புலித்தோல்.

8. * * * * *

9. பொ-ரை: நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.

கு-ரை: நல்ல மலர் நல்லம்மலராயிற்று. மலர்மேலான்பிரமன். ஞாலமது உண்டான் திருமால். அல்லர் என ஆவர் என தலைவர் அல்லர் எனவும் தலைவர் ஆவர் எனவும் தாமே தருக்கி நின்று.

10. பொ-ரை: சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற