பக்கம் எண் :

 18. திருநின்றியூர்415



நெறியில்லவர் குறிகள்நினை

யாதேநின்றி யூரில்

மறியேந்திய கையானடி

வாழ்த்தும்மது வாழ்த்தே. 10

194. குன்றம்மது வெடுத்தானுடல்

தோளுந்நெரி வாக

நின்றங்கொரு விரலாலுற

வைத்தானின்றி யூரை

நன்றார்தரு புகலித்தமிழ்

ஞானம்மிகு பந்தன்

குன்றாத்தமிழ் சொல்லக்குறை

வின்றிநிறை புகழே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச் சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.

கு-ரை: நெறியில் வரும் - தொன்றுதொட்டுக் குரு காட்டிய நெறியினின்று பயில்வதால் வருகின்ற. பேராவகை நினையா நினைவொன்றை அறிவில் சமண் ஆதர் - பேராதே மறவாதே தன்மயமாய் இருந்து நினைக்கப்படும் ஒருபொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள். மயராது - மயங்காது - நெறியில்லவர் - தமக்கென்று உண்மை நெறியில்லாதவர்களாகிய புறச்சமயிகள். குறிகள் - அடையாளங்கள். மறி - மான்.

11. பொ-ரை: கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல்தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.