பக்கம் எண் :

416திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கு-ரை: உற - பொருந்த. ஞானம்மிகுபந்தன் - ஞானசம்பந்தன். இச்சொல் ஞானசம்பந்தன் என்பதற்குப் பொருள் காட்டியது போலும். குன்றாத் தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.

திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்

தாதுநிலை யொன்றேழா மயிலையினிற்

பாணினியுஞ் சமழ்ப்ப வாக்கி

யேதுநுத லுபமான வளவெவையும்

பிரத்தியக்கத் தெய்தக் காட்டி

யோதுமுறை வேதமுமோ தாதுணர்ந்தே

முத்தியுமீங் குதவி யாண்ட

நாதனெழிற் பூந்தராய்க் கவுணியநா

யகன்பதங்கள் நயந்து வாழ்வாம்.

- மு. சாமிநாதய்யர்.

ஆதிபுரி புராணம்

கும்பந்தன் னிடத்துதித்த முனிவரன்செந்

தமிழ்நாட்டிற் குண்டர் மாயை

கம்பந்தம் பின்செய்து கலதைதனின்

மயங்குகவு ரியன்மே லுற்ற

வெம்பந்த மிகுகூனும் வெப்பினொடு

நீக்கியொளிர் வெண்ணீறீந்த

சம்பந்தப் பெருமான்தன் சரணார

விந்தமலர் தலைமேற் கொள்வாம்.

- சுப்புராய செட்டியார்.