தணிபடு கதிர்வள ரிளமதி
புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநலம்
மலிகழ லிணைதொழன் மருவுமே. 2
197. வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில்
விழவொலி மலிகழு மலமமர்
எரியுறு நிறவிறை வனதடி
யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
யிருள்கெட நனிநினை வெய்துமதே. 3
__________________________________________________
பிறவிகள் நீங்குதல் எளிதாகும்.
அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை
உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக
அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த
கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும்,
உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை
உடைய கறைக் கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த
திருவடிகளைத் தொழுதல் செய்மின்.
கு-ரை: பிணிபடுகடல் பிறவிகள் - ஆதி
ஆன்மிகம் முதலிய பிணிகளோடு தொடக்குண்ட கடல்
போன்ற பிறவிகள். தன்னகப்பட்டாரை மீளவிடாதே
மேலும் மேலும் பிணிக்கின்ற பிறவிக்கடல் என்றுமாம்.
அறல் - நீங்குதல். அது பெருகிய திரை உளது - அப்பிறவிக்கடல்
மிகப் பெருகுகின்ற அலைகளையுடையது. அனல் உருவினனாகிய
மதிபுனைவனை, உமைதலைவனை, கறைமிடறனை,
கழலிணை தொழல் மருவும் எனக் கூட்டுக. புனைவன் -
சூடுபவன். நிறமணி படும் கறை மிடறன் - ஒளிபொருந்திய
நீலமணிபோலும் விடம்பொருந்திய கழுத்தினையுடையவன்.
நலம் - வீட்டின்பம்.
3. பொ-ரை: கோடுகள் பொருந்திய
புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி
மிக்குத் தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை
அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய
பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும்
ஆகிய
|