பக்கம் எண் :

 19. திருக்கழுமலம்419



198. வினைகெட மனநினை வதுமுடி

கெனில்நனி தொழுதெழு குலமதி

புனைகொடியிடைபொருள் தருபடு

களிறின துரிபுதை யுடலினன்

மனைகுட வயிறுடை யனசில

வருகுறள் படையுடை யவன்மலி

கனைகட லடைகழு மலமமர்

கதிர்மதி யினனதிர் கழல்களே. 4

__________________________________________________

கழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.

கு-ரை: வரியுறுபுரி அதள் - கோடுகள் பொருந்திய புலித்தோல். வளர்பிறையையும் கதிரையும் பொதிந்த விரியுறுசடையையுடைய இறைவன், கழுமலம் அமர் இறைவன் எனத் தனித் தனிக் கூட்டுக. எரியுறு நிற இறைவன் - தீவண்ணன். பரவுவர் தமது நினைவெய்தும் எனக்கூட்டுக. எரியுறுவினை - வருத்துகின்ற நல்வினை தீவினைகள். கதிர்முனை இருள் - ஒளிப்பொருளாகிய சூரியனையும் வெறுத்தோட்டுகின்ற இருள் என்றது ஆணவமலம் என்றவாறு. நனி நினைவெய்தும் - தயிலதாரை போல இடைவிடாது இறைவன் நினைப்பெய்தும்.

4. பொ-ரை: உயர்ந்த பிறை மதி, கொடி போன்ற இடையையுடைய கங்கை, மந்திரப்பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.

கு-ரை: குலமதிபுனை - உயர்ந்த பிறைமதியை அணிந்த கொடியிடை -சுற்றிக் கொண்டிருக்கின்ற காட்டுக்கொடிகளினிடையே.