பக்கம் எண் :

 19. திருக்கழுமலம்421



200. வரைபொரு திழியரு விகள்பல

பருகொரு கடல்வரி மணலிடை

கரைபொரு திரையொலி கெழுமிய

கழுமல மமர்கன லுருவினன்

அரைபொரு புலியத ளுடையினன்

அடியிணை தொழவரு வினையெனும்

உரைபொடி படவுறு துயர்கெட

வுயருல கெய்தலொரு தலைமையே. 6

201. முதிருறி கதிர்வள ரிளமதி

சடையனை நறநிறை தலைதனில்

உதிருறு மயிர்பிணை தவிர்தசை

யுடைபுலி யதளிடை யிருள்கடி

__________________________________________________

மதில் - முப்புரங்கள். மனம் மருவினன் - மனம் பொருந்தினன். நலகலை மருவிய புறவு - நல்லகலைமான்கள் பொருந்திய சிறுகாடு. புறவம் என்ற தலப்பெயர்க் காரணம் புலப்படும்.

6. பொ-ரை: மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ள வரிகளாக அமைந்த மணற்பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஓசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத்தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.

கு-ரை: கழுமலத்தில் எழுந்தருளியுள்ள. தீவண்ணப் பெருமானின் திருவடியைத் தொழ, வினை யென்னும் சொல்லும் பொடி பட உயர்ந்த உலகத்தை யடைதல் துணிபு என்கின்றது. அருவிகள் பல பருகு ஒருகடல் - பல அருவிகளைப் பருகுகின்ற பெரியகடல். திரை ஒலி கெழுமிய கழுமலம் - அலையோசையோடு எப்பொழுதும் கூடியிருக்கிற சீகாழி. உரையும் பொடிபடவே அதன் பொருளாகிய வினைபொடிபடுதல் சொல்லாமலேயமையும் என்பதாம்.

7. பொ-ரை: மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்ற