பக்கம் எண் :

422திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



கதிருறு சுடரொளி கெழுமிய

கழுமல மமர்மழு மலிபடை

அதிருறு கழலடி களதடி

தொழுமறி வலதறி வறியமே. 7

202. கடலென நிறநெடு முடியவன்

அடுதிறல் தெறவடி சரணென

அடனிறை படையரு ளியபுகழ்

அரவரை யினனணி கிளர்பிறை

விடநிறை மிடறுடை யவன்விரி

சடையவன் விடையுடை யவனுமை

உடனுறை பதிகள்தன் மறுகுடை

யுயர்கழு மலவிய னகரதே. 8

__________________________________________________

மதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.

கு-ரை: நற நிறை தலைதனில் - தேனிறைந்த திருமுடியில். முதிர் உறுகதிர் வளர் இளமதி - முதிர்ச்சியடையும் கதிர்கள் வளரும் இளைய ஒருகலைப்பிறைச்சடையை யுடையவனை; உதிர் உறுமயிர்பிணை - உதிரத்தக்க மயிர்கள் உதிராதே பிணைந்திருக்கும், தவிர் தசையுடை புலியதள் - கழன்ற தசையையுடைய புலித்தோலை உடுத்த. இடை - இடையினை யுடையவனை. இடை என்பது உடையானைக் காட்டி நின்றது. படையையும் கழலையும் உடைய அடிகள். அடிகளின் திருவடியைத்தொழும் அறிவல்லது பிறவற்றை யறியோம் என்று உறைத்த திருத்தொண்டைக் கூறியருளியவாறு.

8. பொ-ரை: கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்க வாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை