204. அமைவன துவரிழு கியதுகில்
அணியுடை யினரம ணுருவர்கள்
சமையமு மொருபொரு ளெனுமவை
சலநெறி யனவற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமமர்
இறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலில்
உயர்நெறி நனிநணு குவர்களே. 10
205. பெருகிய தமிழ்விர கினன்மலி
பெயரவ னுறைபிணர்திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
கழுமல முறைவிட மெனநனி
__________________________________________________
10. பொ-ரை: தமக்குப்
பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை
அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற
சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும்
அறவுரைகளும் ஆகிய அவை வஞ்சனை மார்க்கத்தை
வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற
கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப்
பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன்
அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.
கு-ரை: அமைவன - பொருந்துவனவாகிய.
துவர் இழுகிய துகிலினர் - மருதந்துவர் ஊட்டின
ஆடையராகிய புத்தர். அமண் உருவர்கள் -
சமணர்கள். ஒருபொருளெனும் சமயமும்,
அறவுரைகளும் ஆகிய அவை சலநெறியன - மேற் கூறிய
புத்தரும் சாக்கியரும் ஒரு பொருளாகக் கூறும்
சமயங்களும், அவற்றில் அவர்கள் கூறும்
தர்மோபதேசங்களும் ஆகிய அவைகள் வஞ்சனை
மார்க்கத்தை வகுப்பன. நமையல - வருத்தா.
‘நமைப்புறுபிறவிநோய்’ என்னும்
சூளாமணிப்பகுதியும் இப்பொருட்டாதல் காண்க.
‘நும்மால் நமைப்புண்ணேன்’ என்ற அப்பர் வாக்கும்
நினைவுறத் தக்கது. வினை நலன் அடைதலின்
நமையல நனி உயர்நெறி நணுகுவர்கள் என இயைக்க.
11. பொ-ரை: பரந்துபட்ட நூல்களைக்
கொண்டுள்ள தமிழ்மொழியை ஆழ உணர்ந்தவனும்,
மிக்க புகழாளனும் ஆகிய ஞான
|