பக்கம் எண் :

 19. திருக்கழுமலம்425



பெருகிய சிவனடி பரவிய

பிணைமொழி யனவொரு பதுமுடன்

மருவிய மனமுடை யவர்மதி

யுடையவர் விதியுடை யவர்களே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

சம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதிமனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.

கு-ரை: தமிழ் விரகினனாகிய பெயரவன் பரவிய மொழிகள் பத்தும் மருவிய மனம் உடையவர் மதியுடையர் விதியுடையவர்கள் எனக் கூட்டுக. மலிபெயரவன் - நிறைந்த புகழ் உடையவன். உறைபிணர் திரையொடு - நீர்த்துளிகளோடு மடங்குகின்ற அலைகளோடு. பிணைமொழியன - அன்பு பூட்டிய மொழிகள்.

குருவருள்: இப்பதிகம் ஒருபது பாடல்களையும் மருவிய மனம் உடையவர். நன்மதியுடையவராவர். அவர் நல்விதி உடையவரும் ஆவர். எனவே, இறைநெறி சேராதார் நல்மதியும் நல்விதியும் உடையவராகமாட்டாராய் இடர்ப்படுவர் என்பது குறிப்பெச்சம்.

உத்தரகோச மங்கைப் புராணம்

காரமண ரிருட்குறும்பு கரந்தொளிப்ப

இலங்குதிரைக் கடல்வாய்ச் சூழ்ந்த

பாரடைய நீற்றினொளி நிலவெறிப்பப்

புகழ்நிலவு பரவா நிற்பச்

சீரளவுந் தமிழ்ப்பதிகத் தின்னமுதம்

பொழியுமதிச் செல்வன் வான்றோய்

தாரணியும் பொழில்புடைசூழ் சண்பையர்கோன்

பதகமலம் தலைமேற் கொள்வாம்.

- நெல்லைநாதர்.