பக்கம் எண் :

 20. திருவீழிமிழலை427


207. தரையொடு திவிதல நலிதரு

தகுதிற லுறுசல தரனது

வரையன தலைவிசை யொடுவரு

திகிரியை யரிபெற வருளினன்

உரைமலி தருசுர நதிமதி

பொதிசடை யவனுறை பதிமிகு

திரைமலி கடன்மண லணிதரு

பெறுதிடர் வளர்திரு மிழலையே. 2

208. மலைமக டனையிகழ் வதுசெய்த

மதியறு சிறுமன வனதுயர்

தலையினொ டழலுரு வனகர

மறமுனி வுசெய்தவ னுறைபதி

__________________________________________________

2. பொ-ரை: மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலை போன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.

கு-ரை: முதல் இரண்டடிகள் சலந்தரன் சிரங்கொய்த சக்கரத்தைத் திருமாலுக்கருளியது குறிக்கப்படுகிறது. திவிதலம் - விண்ணுலகம். சலதரன் - சலந்தராசுரன். வரையன தலை - மலையையொத்த அவனது தலை. திகிரி - சக்கராயுதம், திருமால் ஆயிரம் தாமரை கொண்டு அருச்சித்தமைக்காகச் சக்கராயுதம் அருளினார் என்பது இத்தல வரலாறு. உரைமலிதரு - புகழ் மலிந்த. சுரநதி - தேவகங்கை. கடற்கரை மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை என்பது சிந்திக்கத்தக்கது. அவர்கள் காலத்து இத்தலம் நெய்தல் வேலியாக இருந்திருக்கும் போலும்.

3. பொ-ரை: மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்ப புத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான் உறையும் தலம், கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத்துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள்