பக்கம் எண் :

428திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கலைநில வியபுல வர்களிடர்

களைதரு கொடைபயில் பவர்மிகு

சிலைமலி மதிள்புடை தழுவிய

திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 3

209. மருவலர் புரமெரி யினின்மடி

தரவொரு கணைசெல நிறுவிய

பெருவலி யினனல மலிதரு

கரனுர மிகுபிண மமர்வன

இருளிடை யடையுற வொடுநட

விசையுறு பரனினி துறைபதி

தெருவினில் வருபெரு விழவொலி

மலிதர வளர்திரு மிழலையே. 4

__________________________________________________

வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.

கு-ரை: முதல் இரண்டடிகளில் தக்கன் சிரங்கொய்த வரலாறும், அக்கினியைக் கையரிந்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. மதியறு சிறுமனவன் - புத்திகெட்ட சிறுமனத்தையுடைய தக்கன். உயர்தலை - மனிதத்தலை. அழல் உருவன கரம் - தீவடிவினனாகிய அக்கினி யினதுகை. சிலை மலிமதிள் - மலையைப் போன்ற மதில்கள். இத்தலத்திலுள்ள கொடையாளிகள் புலவர்களின் துன்பங்களைக் களைகின்றார்கள்.

4. பொ-ரை: பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெரு வலிபடைத்தவனும், நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: இது இறைவனது திரிபுரமெரித்த வீரத்தையும், கைவண்மையையும், சுடுகாட்டில் நடமாடிய செயலையும் குறிப்பிடுகிறது.