210. அணிபெறு வடமர நிழலினில்
அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும்
அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர்
அறுபத முரல்திரு மிழலையே. 5
211. வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
__________________________________________________
மருவலர் - பகைவர்; திரிபுராதிகள்.
நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த
திருக்கரங்களையுடையவன். உரமிகுபிணம் -
வலிமைமிக்க பிணங்கள். அமர்வன இருள் இடை
அடை உறவொடு நடை விசை உறு பரன் எனப்பிரிக்க.
5. பொ-ரை: அழகிய கல்லால
மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி
இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும்,
சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய
அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்
செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி
பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம்
ஆகியவற்றை அடித்துவரும் ஆற்றுநீர் நிலமெல்லாம்
நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும்
செறிந்த பொழில்கள்தரும் மணத்தை நுகரும்
வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.
கு-ரை: இது ஆலின் கீழ் அறம்
நால்வர்க்கு உரைத்த வரலாறு அறிவிக்கிறது.
வடமரநிழல் - ஆலநிழல். அமர்வு - விருப்பம்.
இருவர்கள் - சனகர் முதலிய நால்வரும்,
இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் இருவர் இருவராக
இருந்தமை கருதற்குரியது. மறை - இருந்ததனை
இருந்தபடி இருந்துகாட்டும் அநுபவநிலை.
பொழில்தரு மணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலை
எனப்பிரிக்க.
6. பொ-ரை: குற்றமற்ற வலிய
வேடர் உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய
கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய
|