அசைவில படையருள் புரிதரும்
அவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே. 6
212. நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவ னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே. 7
__________________________________________________
வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும்
வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை
தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி
எய்தாத பாசுபதக்கணையை வழங்கி அருள்புரிந்த
சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள்
திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும்
செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: இது விசயன் வீரத்தை
உமாதேவிக்குக் காட்டிப் பாசுபதம் அருளிய வீரம்
குறிப்பிடுகிறது. வசையறு வலி - குற்றமற்ற வலிமை.
வனசர உருவு - வேட உருவம். நினைவருதவம் - முனிவர்
எவரும் நினைத்தற்கரிய கடுந்தவம், மிடல் -
வலிமை, அசைவில படை - தோற்காத
பாசுபதாஸ்திரம்.
7. பொ-ரை: நன்மைகள் பலவும்
நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர்,
மணப்புகை, தீபம், மலர்கள்
ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும்
மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக்
கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு
உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக
மக்கள் திலகம் எனப் புகழ்வதும் பொழில்கள்
சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.
கு-ரை: இது மார்க்கண்டேயற்காகக்
காலனை உதைத்த வரலாற்றைக் கூறுகிறது.
மறைமொழியொடு - வேதமந்திரங்களொடு. நதியுறு
புனல் - தேவகங்கையின் திருமஞ்சனதீர்த்தம்.
புகை ஒளி
|