213. அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே. 8
214. அயனொடு மெழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
__________________________________________________
முதல் - தூபம் தீபம் முதலான ஆராதனைப்
பொருள்கள். மறையவன் - மார்க்கண்டேயன்.
சலம் மலிதரு மறலி - வஞ்சம் மிகுந்த இயமன்.
உலகுகள் திலகம் இது எனப் புகழ் தரு பொழில்
அணிமிழலை எனமாறிக் கூட்டுக.
8. பொ-ரை: சிவபிரான் எழுந்தருளிய
கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப்
பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது
கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய
வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும்,
வரன் முறையால் உலகைப் படைக்கும் பூவின் நாயகனான
பிரமன் வழி வழுவியதால் ஐந்தாயிருந்த அவன்
சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண்
பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும்
பதி திருவீழிமிழலையாகும்.
கு-ரை: இது வழக்கம்போல இராவணன்
வரலாறு கூறுகிறது. தசமுகன் - இராவணன்.
வரன்முறை உலகவைதரும் மலர்வளர் மறையவன் -
அந்தந்த ஆன்மாக்களுக்கு வகுக்கப்பெற்ற நியதி
தத்துவத்தின் வழிநின்று உலகம் உடல் போகம்
இவற்றைப் படைக்கின்ற பிரமன். வழிவழுவிய -
உமாதேவியாரை இகழ்ந்ததாகிய தவறு இழைத்த.
9. பொ-ரை: நான்முகனும் அழகிய
மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது
அஞ்சி நிற்க, ஒரு சோதிப் பிழம்பாய்த்
தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய
எனப்போற்றித் துதி
|