பக்கம் எண் :

432திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சயசய வெனமிகு துதிசெய

வெளியுரு வியவவ னுறைபதி

செயநில வியமதின் மதியது

தவழ்தர வுயர்திரு மிழலையே. 9

215. இகழுரு வொடுபறி தலைகொடும்

இழிதொழின் மலிசமண் விரகினர்

திகழ்துவ ருடையுடல் பொதிபவர்

கெடவடி யவர்மிக வருளிய

புகழுடை யிறையுறை பதிபுனல்

அணிகடல் புடைதழு வியபுவி

திகழ்சுரர் தருநிகர் கொடையினர்

செறிவொடு திகழ்திரு மிழலையே. 10

__________________________________________________

செய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: இது அயனும் மாலும் அறியாத அழல் உருவாய் நின்ற வரலாற்றை அறிவிக்கிறது. மலர் மகள் மகிழ் கணன் - திருமகள் மகிழும் கண்ணனாகிய திருமால். தழல் நிகழ்வதொர்படி உருவது வர - தீப்பிழம்பாக ஒளிரும் திருமேனி பொருந்த, வெளி உருவிய அவன் - ஆகாயத்தைக் கடந்த அவன்; செயம் நிலவிய மதில் - வெற்றி விளங்குகின்ற மதில்.

10. பொ-ரை: பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப் புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத் தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும்.

கு-ரை: இது சமணர்கெட அடியவர்க்கருளியதை யறிவிப்பது. இகழ் உரு - பிறரால் இகழத்தக்க வடிவம். துவர் உடை உடல்