21. திருச்சிவபுரம்
பதிக வரலாறு:
திருநறையூர்ச் சித்தீச்சரம் முதலிய
தலங்களை வணங்கிப் பதிகப்பணி செய்து, திரு
அரிசிற்கரைப்புத்தூரில் இருக்கின்ற காலத்து,
திருஞானசம் பந்தப்பிள்ளையார்
திருச்சிவபுரத்திற்கு எழுந்தருளினார்கள்.
இத்தலம் திருமால் வெள்ளைப்பன்றியாய்ச்
சிவபெருமானை வழிபட்ட தலமாதலின் அங்கே
எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருவடியை
வணங்கிப் ‘புவம் வளி‘ என்னும் இப்பதிகத்தை
யருளிச் செய்தார்கள்.
இப்பதிகம் சிவனே ஐந்தொழிலை
ஆற்றும் முதல்வன். பதவிகளில் இருப்பார்
அனைவரும் சிவன் அருளைத் தாங்கி நின்றே
ஆற்றுகின்றனர். அச்சிவனை அடையும் நெறிகள்
தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம்,
சகமார்க்கம், சன்மார்க்கம் என்பன.
அவ்வந்நெறிகளில் வழுவாது நின்றார் சாலோக
சாமீப சாரூப சாயுச்சியமாகிய முத்திகளை
எய்துகின்றனர். அவனைச் சிவபுரத்தில்
வழிபடுகின்றவர்கள் நிலமிசை நிலை பெறுவர்,
கலைமகள், அலைமகள், செயமகள் அருள்
பெறுவர். எல்லா நன்மையும் பெறுவர் என்கின்றது.
இதனைச் சேக்கிழார் பெருமான் பொங்குமிசைத்
திருப்பதிகம் என்பார்கள்.
திருவிராகம்
பண்: நட்டபாடை
பதிக எண்: 21
திருச்சிற்றம்பலம்
217. புவம்வளி கனல்புனல் புவிகலை
யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரு முயிரவை யவைதம
__________________________________________________
1. பொ-ரை: விண், காற்று,
தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும்
பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும்
வேதங்களையும், முக்குணங்களையும்,
விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்
|