பக்கம் எண் :

 21. திருச்சிவபுரம்435


பவமலி தொழிலது நினைவொடு

பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுர நினைபவர்

செழுநில னினில்நிலை பெறுவரே. 1

218. மலைபல வளர்தரு புவியிடை

மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலைமலி சுரர் முத லுலகுகள்

நிலைபெறு வகைநினை வொடுமிகும்

__________________________________________________

வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப் பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.

கு-ரை: இது இறைவனே சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப் பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது. புவம், வளி, கனல், புனல், புவி - விண்ணாதி மண்ணந்தமாகிய ஐம்பெரும் பூதங்கள். புவம் - வான், கலை - எண்ணெண் கலைகள். உரைமறை - இறைவன் புகழைச் சொல்லும் வேதம். திரி குணம் - சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி - விரும்பத்தக்க மார்க்கங்கள். திவம் - தேவலோகம். உயிரவை - தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச் சொல்லப்பட்ட உயிர்கள். அவைதம பவமலி தொழிலது நினைவொடு - அவ்வவ் ஆன்மாக்களுடைய வினைக்கு ஈடாக அருளப் படுகின்ற பிறவிக்கேற்ற சிருட்டித் தொழிலின் நினைவொடு. எனவே இறைவன் பிரமனைப்போல விகாரியாய்ப் படைப்பவனல்லன், இச்சையால் எல்லாம் இயங்குகின்றன என்பது. பதும நன்மலரது மருவிய சிவன் - தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப் பிரமன் தியானித்தலான் சிருட்டி கைவரப்பெறுவன் என்பது.

2. பொ-ரை: மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை