பக்கம் எண் :

436திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அலைகட னடுவறி துயிலமர்

அரியுரு வியல்பர னுறைபதி

சிலைமலி மதிள்சிவ புரநினை

பவர்திரு மகளொடு திகழ்வரே. 2

219. பழுதில கடல்புடை தழுவிய

படிமுதலியவுல குகள்மலி

குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்

குலமலி தருமுயி ரவையவை

முழுவது மழிவகை நினைவொடு

முதலுரு வியல்பர னுறைபதி

செழுமணி யணிசிவ புரநகர்

தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 3

__________________________________________________

பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.

கு-ரை: இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு திகழ்வர் என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின் மலை பல வளர் தருபுவி எனப் புவியை விசேடித்தார். மறைதரு வழிமலி மனிதர்கள் - வேத விதியின்படி அக ஒழுக்கத்தையும், புறவொழுக்கத்தையும் வரையறுத்த மக்கள். நிலைமலிசுரர் - மக்களைக் காட்டிலும் வாழ்வால் நீடித்த தேவர்கள், முதல் உலகுகள் என்றது, விண்ணும் மண்ணும் கூறவே இடைப்பட்டனவெல்லாம் உணரவைத்தார், அறிதுயில் - யோகநித்திரை.

3. பொ-ரை: பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர்