220. நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே. 4
__________________________________________________
ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும்
வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து
அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான்
உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு
செய்யும் சிவபுர நகரைத் தொழுவோரின் புகழ்
உலகில் மிகும்.
3. கு-ரை: இது நிலம் முதலிய உலகுகள்
முழுவதுமழியும்படி ருத்திராம்சத்தோடு எழுந்தருளும்
இறைவன் பதியைத் தொழுமவர் புகழ் உலகில் மிகும்
என்கின்றது. கடல்புடை தழுவியபடி என்றது சங்கார
கிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி
விசேடித்தபடி. படி - பூமி. படி முதலிய உலகுகள்
என்றது ஒடுக்க முறைக்கண் பிருதிவி முதலாயின முறையே
தத்தம் காரணமாகிய மாயையில் ஒடுங்கும் முறை
பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது
உயிர்கள் ஒடுங்குதலை உயிர்களுக்கு என்றும்
அழிவின்மையின். முதல் - இறைவனது உருவாகிய
உருத்திரவடிவு.
4. பொ-ரை: மணம் மிகுந்த
சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த
மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய
தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த
நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும்,
மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும்
நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா
நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய
அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய
பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம்
நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை
நினைபவர் சயமகள் தலைவராவர்.
கு-ரை: இது அபிஷேக ஆராதனைப்
பொருள்களோடு நியதியாக வழிபடும்
அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக்
கொடுக்கும் மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள்
செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது. நறை
மலிதரும் அளறு - மணம் மிகுந்த சந்தனம். முகை நகு
மலர் - முகையும் மலரும், புகை - தூபம். ஒளி -
தீபம்.
|