பக்கம் எண் :

 பதிப்புரை45


ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதாரமாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக் கூடத்திலும், புஷ்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக்கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.

கி.பி. 1864-66 இல் மூவர் தேவாரமும் ஏழு திருமுறைகளாகப் பண்முறையில் மூன்று தனிநூல்களாக சுப்பராய ஞானியாரால், சபாபதி முதலியார் உதவியுடன் முதன் முதலில் அச்சுப் புத்தக வடிவில் தமிழுலகிற்கு வழங்கப் பெற்றன.

பண்முறை தேவாரப் பதிப்புக்களை சைவ நன்மக்கள் விரும்பி வாங்கியதால் பத்து ஆண்டுகளுக்குள் மறுபதிப்பு வெளிவர வேண்டியதாயிற்று. அதனை அறிந்த சுப்பராய ஞானியார் பெருமகிழ்வு கொண்டார். கி.பி. 1864-66இல் பதிப்பிக்கப் பெற்ற தேவார நூல்கள் எத்தனை பிரதிகள் அச்சிடப் பெற்றன என்று குறிப்பிடும் வழக்கம் இன்று வரை வெளிவந்துள்ள தேவாரப் பதிப்புக்களில் குறிப்பிடப்படவில்லை.

சைவநன்மக்கள், மூவர் தேவாரத்திற்கும் தலமுறைப் பதிப்புக் கிட்டின் ஒருசேரப் பாராயணம் செய்யலாம் என்று எண்ணம் கொண்டனர். அவ்வெண்ணம் ஈடேறும் வகையில் துறைசை ஆதீனம் மேலகரம் சீலத்திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் திருவுளப்பாங்கின் வண்ணம், பனசைக் காசிவாசி ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளின் ஆதரவோடு, துறைசை ஆதீன அப்பு ஓதுவார் ஓதின பண்ணின்படி மதுரை, துறைசை ஆதீனங்களில் கிடைத்த பிரதிகளை ஒப்பிட்டு மதுரை இராமசாமிப் பிள்ளை என்னும் ஞானசம்பந்தம் பிள்ளை சென்னை புஷ்பரத செட்டியாரின் கலாரத்தின அச்சுக் கூடத்தில் விஷு ஆண்டு (கி.பி. 1881) மார்கழித் திங்களில் தலமுறைத் தேவாரம் முழுவதையும் முதன்முறையாகப் பதிப்பித்து வழங்கினார்.

தலமுறைத் தேவாரத்தில் மக்கள் நாட்டம் கொள்ளவே தருமை ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் தவத்திரு சிவஞான தேசிக மூர்த்திகள் ஆணையின் வண்ணம், திருப்பனந்தாள் காசிவாசி ஸ்ரீமத் சாமிநாத சுவாமிகள் ஆதரவுடன் திருமயிலை செந்தில்வேல் முதலியாரால் சென்னை விக்டோரியாஜுபிலி அச்சுக்கூடத்தில் கி.பி 1894 இலும், சென்னைக் கலாரத்நாகர அச்சுக் கூடத்தின் வாயிலாகக் கி.பி. 1905 இலும் அச்சிடப் பெற்றுத் தலமுறைத் தேவார அடங்கன்