பக்கம் எண் :

 22. திருமறைக்காடு453


238. வசையறு மலர்மக ணிலவிய

மறைவன மமர்பர மனைநினை

பசையொடு மிகுகலை பலபயில்

புலவர்கள் புகழ்வழி வளர்தரு

இசையமர் கழுமல நகரிறை

தமிழ்விர கனதுரை யியல்வல

இசைமலி தமிழொரு பதும்வல

வவருல கினிலெழில் பெறுவரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கு-ரை: இது புறச்சமயத்தாரால் அறியமுடியாத பரன் ‘மறை வனநாதன்‘ என்கின்றது. இயல்வு அழிதர - உலகவியற்கை கெட, விதுசெலவுற - காற்று வீச. மயில் இறகு தழையொடு - மயிற்பீலிக் கற்றையொடு. செயல் மருவிய சிறுகடம் முடி - வேலைப்பாடமைந்த குண்டிகை வைக்கப்பட்ட உறி, துவர்படம் - கல்லாடை. வளைவளம் - சங்குதந்த முத்தாகிய வளப்பங்கள்.

11. பொ-ரை: குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.

கு-ரை: இது மறைவனநாதனை மனத்தெண்ணிய அன்போடு, கற்றார் பயிலும் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் உலகில் அழகெய்துவர் என்கின்றது. வசையறு மலர்மகள் - குற்றமற்ற திருமகள், திருமகளுக்குக் குற்றம் ஓரிடத்தும் நில்லாமையும், தக்காரிடத்துச் செல்லாமையும் போல்வன. மறைவனத்து அங்ஙனம் இல்லாமையின் குற்றமற்றவள் ஆயினள்.