260. காரார் வயல்சூழ் காழிக்
கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா விருப்பரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட
சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது,
சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த
பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர்,
அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.
கு-ரை: காழிநாதனைப்பற்றி ஞானசம்பந்தன்
சொன்னவைகளை உலகோர் புகழ உரைக்கவல்லவர்கள்
வானத்து இனிதாய் இருப்பர் என்கின்றது. ஏர் - அழகு.
திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்தர் புராணம்
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித்
திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி
அவற்றுள் ஒன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட
மேவு காதல்
பொருத்தம்உற அருள்பெற்றுப்
போற்றிஎடுத் தருளினார்
பூவார் கொன்றை.
- சேக்கிழார்.
|
|