வழங்கினார். இது கி.பி.
1913 இல் வெளிவந்தது. இவையே தேவாரம் பற்றிய
பழைய பதிப்புக்களாம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்களைக்
கொண்டு கி.பி. 1927 பிப்ரவரித் திங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரத்தையும், கி.பி.
1928 பிப்ரவரித் திங்கள் திருநாவுக்கரசர் தேவாரத்தையும்,
கி.பி. 1929 ஏப்ரலில் சுந்தரர் தேவாரத்தையும்
பண்முறையை ஒட்டி தனித்தனி நூல்களாக அச்சிட்டு
வழங்கியது.
அடுத்து பண்முறைத்தேவாரப்பதிப்பு
சைவசித்தாந்த சமாஜத்தினரால் அரும்பொருள் அகராதியுடன் கி.பி.
1929-1931இல் மூன்று தொகுப்புக்களாக மிகக் குறைந்த
விலையில் வெளியிடப் பெற்றன.
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின்
சார்பில் தேவாரத் திருமுறைகள் பல பதிப்புக்களாக
வெளியிடப் பெற்றுள்ளன.
திருவாவடுதுறை ஆதீனம்
பண்முறையில் தேவாரத் திருமுறைகளை வெளியிட்டு உள்ளது.
திருமுறை உரைப் பதிப்பு:
இத்தகைய திருமுறைகள்
அனைத்தையும் உரையோடு படித்துப் பொருள் உணர்ந்து ஓதினால் அவை
நம் நெஞ்சில் நிலைத்து நின்று பயன் விளைக்கும்
என்று திருவுளத்தெண்ணிய தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய
சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் உரை இல்லாதவற்றுக்கும்
உரை எழுதச் செய்து ஆதீனப் பதிப்பாக அவற்றை
வெளியிடவேண்டும் என்று திருவுளம் பற்றினார்கள்.
தக்க தமிழறிஞர்களைக்
கொண்டு உரை
எழுதச்செய்து ஆதீன வெளியீடுகளாக அவற்றை 1953 ஆம்
ஆண்டு முதல் வெளியிட்டு வந்தார்கள். ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி
அவர்கள் அருளாட்சிக் காலத்தில் 9 திருமுறைகள்
வரை உரையுடன் வெளியிடப் பெற்றன. சமய உலகம்
இவ்வுரைகளைப் போற்றிப் பாராட்டியது.
1971ல் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி
அவர்கள் பரிபூரணம் அடைந்தபின் அவர்கள் தொடங்கிய
திருமுறை வெளியீட்டுப்
|