பணியை தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம்
அவர்கள் 1974, 1984, 1995 ஆம் ஆண்டுகளில் பத்தாம்
திருமுறையாகிய திருமூலர் திருமந்திரத்தை உரையோடு
மூன்று தொகுதிகளாக வெளியிட்டு அருளினார்கள்.
1995 ஆம் ஆண்டிலேயே பதினொன்றாம்
திருமுறையும் வெளியிடப் பெற்றது. பன்னிரண்டாம் திருமுறை
வெளியிடப் பெறுவதற்குரிய வகையில் உரை எழுதுவிக்கப்
பெற்று வந்தது.
பல திருமுறைகளும் விற்பனையான நிலையில்
அவை ஒருசேர அன்பர்கட்குக் கிடைக்க இயலாததால்
அன்பர்கள் அவற்றை ஒருசேர அச்சிட்டு வழங்கியருளுமாறு
கேட்டுக்கொண்டனர்.
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள்
பெருங்கருணையோடு பன்னிரு திருமுறைகளையும், பதினாறு
தொகுதிகளாக ஒருசேர ஒளியச்சில் பதிப்பித்து,
ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி அவர்கள் திருவுளத்து எண்ணியவாறு
தில்லையில் வெளியிடத் திருவுளம் பற்றினார்கள்.
1, 2, 11 ஆகிய திருமுறைகளை ஆதீனச்
செலவிலேயே வெளியிடலாம் எனவும், ஏனையவற்றை
அன்பர்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டும்
வெளியிடத் திருவுளம் கொண்டார்கள். ஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்நிதானம் திருவுளத்தெண்ணியபடி பலரும் இத்திருமுறைப்
பதிப்புக்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றனர்.
இத்திருமுறைப் பதிப்புக்களைச்
செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச்
சென்னை
- யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர்,
மறவன்புலவு திரு.க. சச்சிதானந்தன் அவர்கள்
ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில்
நிறைவேற்றியுள்ளார்.
பன்னிரு திருமுறைகளில்
இம்முதல் திருமுறைக்கு,
தருமை ஆதீனப் புலவர் பத்மபூஷண் மகாவித்துவான்,
முனைவர், திரு. ச. தண்டபாணி தேசிகர்
அவர்கள் எழுதிய குறிப்புரை, விசேட உரைகளோடு,
ஆதீனப் புலவர், வித்துவான், திரு. வி.சா.
குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும்
சேர்க்கப் பெற்றுள்ளது.
புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியக்
கலை நிறுவனம், ஆய்வறிஞர்,
|