262. வாரார் கொங்கை மாதோர்
பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 2
263. வரையார் சந்தோ டகிலும்
வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே. 3
264. மழுவா ளேந்தி மாதோர்பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
__________________________________________________
2. பொ-ரை: கச்சணிந்த தனங்களை
உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப்
பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய
அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய
சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில்
நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.
கு-ரை: இதுவுமது. சேராதவர் - இடைவிடாது தியானியாதவர்.
வினைகள் எனப்பன்மையாற் கூறியது வெடிக்கும் வினைகளாய்
இருத்தலின்.
3. பொ-ரை: மலைகளில் செழித்து வளர்ந்த
சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக்
கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில்
விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம்
பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய
சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள
குற்றங்கள் ஒழியா.
கு-ரை: செம்பொன்பள்ளி நம்பனைத் தோத்திரியாதவர் மேலுள்ள
ஊனம் ஒழியாதென்கின்றது.
வரை - மலை. நரை - வெள்ளை. உரையாதவர் - புகழாதவர்.
4. பொ-ரை: மழுவாகிய வாளை ஏந்தி
உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன்
பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய
சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத்
துயரம் இல்லை.
|