உ
திருச்சிற்றம்பலம்
முதல் பதிப்பின் மதிப்புரை
செந்திலாண்டவன்துணை
திருப்பனந்தாள்,
ஸ்ரீலஸ்ரீகாசிவாசி அருள்நந்தித்
தம்பிரான் சுவாமிகள்
அவர்கள்.
திருமுறைகள் தெய்வமணங்
கமழ்வன;
அவை சிவத்தின் மேல் தெய்வம் வேறிலை என்ற உண்மையை
விளக்குவன. பன்னிரண்டு திருமுறைகளுள் முதலேழும்
வித்தகப்பாடல் முத்திறத்து அடியார்கள் அருளியவை.
எங்கள் தருமை ஆதீன ஸ்தாபகர் ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக
மூர்த்திகள் "திருமுறைகள் ஓதாய்" என்று பணித்தருளினார்கள்.
உலகு எளிதில் ஓதி உணர்ந்து உய்தற் பொருட்டு எங்கள்
குருஞானசம்பந்தர் வழிவழி எழுந்தருளியுள்ள
ஸ்ரீலஸ்ரீசுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய
சுவாமிகள் அவர்கள் இத்திருமுறைகளைக்
குறிப்புரையுடன் வெளியிட்டருளத் திருவுளம் பற்றியது
"வேதநெறி தழைத்தோங்கவும்" "மிகுசைவத்துறை
விளங்கவும்" செய்யும். இது திண்ணம். மக்கள்
இத்தெய்வப் பனுவலைக் கற்று இத்திருமுறைவழி நின்றொழுகி
உள நலமும், உடல் நலமும் பெறுவார்களாக!
|