பக்கம் எண் :

 31. திருக்குரங்கணின்முட்டம்507


330. வாடா விரிகொன் றைவலத் தொருகாதில்
தோடார் குழையா னலபா லனநோக்கி
கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம்
ஆடா வருவா ரவரன் புடையாரே. 4

331. இறையார் வளையா ளையொர்பா கத்தடக்கிக்
கறையார் மிடற்றான் கரிகீ றியகையான்
குறையார் மதிசூ டிகுரங் கணின்முட்டத்
துறைவா னெமையா ளுடையொண் சுடரானே. 5

__________________________________________________

4. பொ-ரை: வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடியவனும், வலக்காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன்.

கு-ரை: இத்தலத்து ஆடிவரும் பெருமானாகிய அவரே அடியேன் மாட்டு அன்புடையார் என்கின்றது. வாடாவிரி கொன்றை - வாடாத விரிந்த கொன்றை மலர்மாலையையும். தேவர்கட்கே அணிந்த மாலை வாடாது; அங்ஙனமாகத் தேவதேவனாகிய சிவபெருமான் அணிந்த மாலை வாடாமை இயல்பு ஆதலின் இங்ஙனம் கூறப்பட்டது. வலத்துக்குழையும், ஓர்காதில் தோடும் உடையான் எனக்கொள்க. நல்ல பாலனம் நோக்கி - நன்றாகக் காத்தலைத் திருவுளங்கொண்டு. கூடாதன செய்த - வேறுதேவர் எவரும் செய்யக்கூடாத அரிய காரியங்களைச் செய்த. ஆடா வருவார் - திருநடனம் செய்து வருவார்.

5. பொ-ரை: இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும், நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான்.

கு-ரை: சிவனே எம்மை யாளுடைய சோதி வடிவன் என்கின்றது. இறையார்வளையாள் இத்தலத்து அம்மையின் திருநாமம். முன்கையில் வளையல் அணிந்தவள் என்பது பொருள். கரி கீறிய கையான் - யானையையுரித்த கையையுடையவன். குறையார்மதி -