பக்கம் எண் :

512திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


339. தடங்கொண்ட தொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ. 2

340. வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோனுறைகின் றவிடை மருதீதோ. 3

341. அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ. 4

__________________________________________________

2. பொ-ரை: தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

கு-ரை: தடம் - குளம். தாமரைப் பொன்முடி - தாமரைசூடிய அழகிய சிரம்.

3. பொ-ரை: வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

கு-ரை: அம் கோல் வளையாளை - அழகிய திரண்ட வளையல் அணிந்த உமாதேவியை. அமர்ந்து - விரும்பி ஏற்று.

4. பொ-ரை: அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம்