கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதா மதுகண் டவரீடே 5
365. கொலையார் தருங்கூற்
றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே. 6
366. திருவார் சிலையா லெயிலெய்து
உருவா ருமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே. 7
__________________________________________________
உயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும்,
தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும்
கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்
பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.
கு-ரை: இது காழி கண்டவர் பெருமை எய்துவர்
என்கின்றது. பனி - குளிர்மை. பனியார் மலர் - தாமரை
மலர். ஆர் தரு - ஒத்த. உமையோடு முயங்கி முனிதான் -
ஒருத்தியோடு கூடியிருந்தும் தான் முனிவனாய் இருப்பவன்.
பாதன் முனி காழி கண்டவர் ஈடு இனிதாம் என முடிக்க.
6. பொ-ரை: கொலைத் தொழில் நிறைந்த
எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு
மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும்,
மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப்
பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.
கு-ரை: இது காழிக்குச் சிரம்பணிவார்
மேலானவர் என்கின்றது. கலையார் - கலைஞானிகள்.
7. பொ-ரை: அழகிய வில்லால் மூவெயில்களை
எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய்
விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும்,
கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப் பெற்றுதுமான
சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை
அடையாதவராவர்.
|