பக்கம் எண் :

526திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


367. அரக்கன் வலியொல் கவடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 8

368. இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரிபும் வினைமாய்ந்தே. 9

__________________________________________________

கு-ரை: இது காழியடையார் வான் அடையார் என்கின்றது. திருவார் சிலை - அழகிய வில்; என்றது பொன் வில்லாதலின் உரு - அழகு.

கருவார் பொழில் - கருமையாகிய சோலை. மருவாதவர் - அடையாதவர்.

8. பொ-ரை: இராவணனது வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும் மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியை நினைந்து வரிசையான மலர்களைத் தூவுமின்.

கு-ரை: இது காழிக்கு மலர் தூவுங்கள் என்கின்றது. அரக்கன் வலி அடர்த்து வரைக்குமகளோடு மகிழ்ந்தான் என்பது. அரக்கன் மலையெடுக்க, உமையாள் எய்திய அச்சத்தைப் போக்கியதும், அவன் செய்த தவற்றிற்காக அவள் காணத் தண்டித்தமையும் விளக்கிநின்றது. ஒல்க - சுருங்க. நிரக்கும் - ஒழுங்கான.

9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரிஉருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.

கு-ரை: இது காழியையடைய வினைகெடும் என்கின்றது. இருவர் - மாலுமயனும். உருவிற் பெரியாள் - பெரியநாயகி என்னும் திருத்தோணிச் சிகரத்திருக்கும் அம்மையார். பரவை - கடல்.