பக்கம் எண் :

 39. திருவேட்களம்553


417. பூதமும்பல்கண மும்புடைசூழப்

பூமியும்விண்ணு முடன்பொருந்தச்

சீதமும்வெம்மையு மாகிச்

சீரொடுநின்றவெஞ் செல்வர்

ஓதமுங்கானலுஞ் சூழ்தருவேலை

யுள்ளங்கலந்திசை யாலெழுந்த

வேதமும்வேள்வியு மோவா

வேட்கள நன்னகராரே. 3

418. அரைபுல்குமைந்தலை யாடலரவ

மமையவெண்கோவணத் தோடசைத்து

வரைபுல்குமார்பி லொராமை

வாங்கியணிந் தவர்தாந்

திரைபுல்குதெண்கடல் தண்கழியோதங்

தேனலங்கானலில் வண்டுபண்செய்ய

விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த

வேட்கள நன்னகராரே.4 __________________________________________________

3. பொ-ரை: கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவகணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.

கு-ரை: இது விண்ணும் மண்ணும் கலந்து தட்பமும் வெப்பமுமாகிப் புகழோடு நின்ற செல்வர் வேட்கள நன்னகரார் என்று அறிவிக்கின்றது. உடன்பொருந்த - எங்குமாயிருக்க. உள்ளங்கலந்து இசையால் எழுந்த வேதம் - மனத்தில் நின்று ஊறி இசையோடு எழுந்தவேதம். ஓவா - இடையறாத.

4. பொ-ரை: இடையிற் பொருந்திய ஐந்து தலைகளை யுடைய நாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை