419. பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல்
பால்புரைநீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறுமார்பினர் பேணார்
மும்மதிலெய்த பெருமான்
கண்ணுறுநெற்றி கலந்தவெண்டிங்கட்
கண்ணியர்விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிறமால்விடை யண்ணல்
வேட்கள நன்னகராரே. 5
__________________________________________________
விரும்பி அணிந்தவராய் விளங்கும்
சிவபெருமானார் அலைகளையுடைய தெளிந்த கடல்நீர்
பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள்
இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை
உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய
திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.
கு-ரை: அரைபுல்கும் - அரையைத் தழுவிய.
அசைத்து - இறுக உடுத்து. வரைபுல்கு - மலையையொத்த.
ஆமை - ஆதி கூர்மம். ஓதம் பைம்பொழில் சூழ்ந்த வேட்களம்
என்க; என்றது நெய்தலோடு தழுவிய நகர் என அறிவித்தவாறு.
5. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை
மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய்,
முப்புரி நூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப்
பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து
அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக்
கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான
பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும்
தலைவராவார்.
கு-ரை: இது கொன்றைமாலை, பூணூல் இவற்றையணிந்து
உமை ஒருபாதியராகத் திரிபுரமெரித்த பெருமான் இவர்
என்கின்றது. பண் உறு வண்டு - இசையை எழுப்புகின்ற வண்டுகள்.
அறை - ஒலிக்கின்ற. அலங்கல் - மாலை. கண்ணுறு நெற்றி
- அக்கினிக்கண் பொருந்திய நெற்றி. வெண்திங்கள்
கண்ணியர் - பிறையைத் தலை மாலையாய் அணிந்தவர்;
பிறையைக் கண்ணியாகச் சூடுதல் மரபு "மாதர்ப்
பிறைக்கண்ணியானை" என்பதை நோக்குக. மால்விடை
பெரிய இடபம்.
|