பக்கம் எண் :

 39. திருவேட்களம்555


420. கறிவளர்குன்ற மெடுத்தவன்காதற்

கண்கவரைங்கணை யோனுடலம்

பொறிவள ராரழலுண்ணப்

பொங்கிய பூதபுராணர்

மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர்

மைஞ்ஞிறமானுரி தோலுடையாடை

வெறிவளர்கொன்றையந் தாரார்

வேட்கள நன்னகராரே. 6

421. மண்பொடிக்கொண்டெரித் தோர்சுடலை

மாமலைவேந்தன் மகள்மகிழ

நுண்பொடிச்சேர நின்றாடி

நொய்யன செய்யலுகந்தார்

கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக்

காலனைக்காலாற் கடிந்துகந்தார்

வெண்பொடிச் சேர்திருமார்பர்

வேட்கள நன்னகராரே. 7

__________________________________________________

6. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக்கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறிபறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்த வரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.

கு-ரை: இது மன்மதனை எரித்த மங்கைபங்கர் திருத்தலம் இவ்வூர் என்கின்றது. கறி - மிளகு. குன்றம் என்றது கோவர்த்தனம். எடுத்தவன் - கண்ணன். காதல் கண்கவர் ஐங்கணையோன் - மகனாகிய பேரழகனாகிய மன்மதன். ஆர் அழல் உண்ண - தீப்பற்றி எரிய. பொங்கிய - கோபித்த. மறி - மான். மைஞ்ஞிறி மான் - கருமான். வெறி - மணம்

7. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத்