பக்கம் எண் :

556திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


422. ஆழ்தருமால்கட னஞ்சினையுண்டார்

அமுதமமரர்க் கருளிச்

சூழ்தருபாம்பரை யார்த்துச்

சூலமோடொண் மழுவேந்தித்

தாழ்தருபுன்சடை யொன்றினைவாங்கித்

தண்மதியம்மய லேததும்ப

வீழ்தருகங்கை கரந்தார்

வேட்கள நன்னகராரே. 8

__________________________________________________

தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற் படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண்பொடி வெண்தலை - கண் பொடிந்து போனதலை. பொடிதல் - இல்லையாதல்.

8. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக்கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத் தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.

கு-ரை: நஞ்சினைத் தாம் உண்டு, அமுதத்தைத் தேவர்க்கருளி, பாம்பு, சூலம், மழு இவற்றைத் தரித்துச் சடையில் கங்கையை மறைத்து வைத்தவர் இவர் என்கின்றது. புன்சடை - மெல்லிய சடை. உயிரைக்