423. திருவொளிகாணிய பேதுறுகின்ற
திசைமுகனுந் திசைமேலளந்த
கருவரையேந்திய மாலுங்
கைதொழ நின்றதுமல்லால்
அருவரையொல்க வெடுத்தவரக்க
னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த
வெருவுறவூன்றிய பெம்மான்
வேட்கள நன்னகராரே. 9
424. அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர்
யாதுமல்லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லாற்
புறனுரையாதொன்றுங் கொள்ளேல்
__________________________________________________
கொல்லும் விடத்தைக் தான் உண்டு
சாவாமையையளிக்கும் அமுதினைத் தேவர்க்களித்தது
இவர் பெருங்கருணையைத் தெரிவிக்கிறது.
9. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவர்,
அழகிய பேரொளிப் பிழம்பைக்
காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும்
அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக
ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க,
கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் நெற்றியும்
அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி
நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.
கு-ரை: இறைவனுடைய பேர் ஒளித் திருமேனியைக்
காணவருந்திய அயனும் மாலும் அறியமுடியாமல் வணங்க நின்றதோடு
இராவணனை ஆழத்தழுத்திய பெருமான் இந்நகரார் என
அறிவிக்கின்றது. திருவொளி - அழல்தூணின் பேரொளி.
திசைமேல் அளந்த - திக்குகள் அனைத்தையுமளந்த.
கருவரை - கோவர்த்தனகிரி. அருவரை - கைலைமலை. ஆடு
எழில் தோள் - வெற்றியோடு கூடிய எழுச்சிமிக்க தோள்.
10. பொ-ரை: செந்நிறமான காவி
மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண்
குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை
உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப்
புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும்
கொள்ளாதீர்.
|