முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச
மூரிவல்லானையி னீருரிபோர்த்த
வித்தகர்வேத முதல்வர்
வேட்கள நன்னகராரே. 10
425. விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி
வெண்கொடியெங்கும் விரிந்திலங்க
நண்ணியசீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணினல்லாளொரு பாகமமர்ந்து
பேணியவேட்கள மேன்மொழிந்த
பண்ணியல்பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமிலாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
முத்துப் போன்ற வெண் முறுவல் உடைய
உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப்
போர்த்த வித்தகரும் வேத முதல் வருமாகிய வேட்கள
நன்னகர் இறைவரை வணங்குமின்.
கு-ரை: இது யானைத்தோல் போர்த்த
வித்தகர் இவ்வூரார் என்கின்றது. அத்தம் மண் - செந்நிறமான
மண். "ஆடுநீரன அத்து மண்களும்" சிந்தாமணி.
2418. யாதும் அல்லா உரை - பொருளற்ற உரை. முறுவல் - பல்
மூரி - வலிமை.
11. பொ-ரை: விண்ணுற வோங்கிய
மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும்
விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும்,
பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள்
தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில்
நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று
எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது
பாடியருளி பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத
வல்லவர் பழி பாவம் இலராவர்.
கு-ரை: இது திருவேட்களப்பதிகத்தை
ஓத வல்லவர்கட்குப் பழி பாவம் இல்லை என்கின்றது.
புகழுக்கு அடையாளமாக வெண்கொடி எடுத்தல் மரபு. பெண்ணின்
நல்லாள்: இது இத்தலத்து அம்மையின் பெயராகிய நல்லநாயகி
என்பதை நினைவூட்டுகின்றது.
|