வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத்
தலைவனதாணிழல் சார்வோம். 3
429. தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை
தாழ்சடை மேலவைசூடி
ஊரிடுபிச்சைகொள் செல்வ
முண்டியென்று பலகூறி
வாரிடுமென்முலை மாதொருபாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர்தூவிக்
கறைமிடற்றானடி காண்போம். 4
__________________________________________________
கு-ரை: இது இறைவனுக்கு மலரிட்டு வணங்கி
அவன்தாள் நிழலைச் சார்வோம் என்கின்றது. பூண்
அசைத்து - ஆபரணமாகக் கட்டி, இடுபிச்சை ஊண் உண்டி
ஊர் ஐயம் என்று பலகூறி என்றது பிச்சைதான் உணவு என்பதைப்
பலமுறையாகச் சொல்லி. தலைவனதாள் - தலைவனுடைய திருவடிகள்.
அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு.
4. பொ-ரை: கொன்றை மாலையையும், வெண்மதியையும்,
கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி,
ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே
தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு
கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை
ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிப்புத்தூர்
சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத்
தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக்
காண்போம்.
கு-ரை: கார்காலத்துப் பூவைத் தூவித் திருவடியைத்
தரிசிப்போம் என்கின்றது. நமக்கு
உணவு ஊர்ப்பிச்சைதான் என்று சொல்லிக்கொண்டு
ஒரு பெண்ணை ஒருபாகமாகக் கொண்டிருக்கிறானென நயச்சுவை
காண்க. வார் - கச்சு. கார் இடுமாமலர் - கார் காலத்துப்
பூவாகிய கொன்றை.
|