வளையொலிமுன்கை மடந்தையொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர்தூவித்
தலைவனதாளிணை சார்வோம். 6
432. அடர்செவிவேழத்தி னீருரிபோர்த்து
வழிதலையங்கையி லேந்தி
உடலிடுபிச்சையோ டைய
முண்டியென்று பலகூறி
மடனெடுமாமலர்க் கண்ணியொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயினதூவித்
தலைவனதாணிழல் சார்வோம். 7
__________________________________________________
சார்வோம் என்கின்றது. அளை - புற்று.
அலர்மிசை அந்தணன் - பிரமன். உச்சி களை தலையில்
- உச்சியிலிருந்து களையப்பட்ட தலையில். தளை - முறுக்கு.
7. பொ-ரை: பரந்த
காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப்
பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய
பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன
முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு
ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம்
வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய
உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர்
இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து
அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம்.
கு-ரை: ஐயமும் பிச்சையுமே
உண்பவன் என்றுகூறி உமையோடிருக்குந் தலைவன்தாளை
மலர்தூவிச் சார்வோம் என்கின்றது. அடர்செவி -
பரந்த காது. அழி தலை - இறந்தார் தலை; என்றது பிரமயாலம்.
பிச்சை - இரவலனாகச்சென்று ஏற்பது. ஐயம் - இடுவானாக
அழைத்திடுவது. இவ்வேற்றுமை தோன்றவே ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில்
"ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி" என்றார்.
ஆத்திசூடியில் "ஐயம் இட்டுண்" என்று இடுவார்
மேலேற்றிச்சொன்னதும் இக்கருத்து நோக்கி,
"பிச்சைபுகினும் கற்கைநன்றே" என்பது இதனை
வலியுறுத்தல் காண்க. உடலிடு பிச்சை - தன்வசமிழந்து
தாருகாவனத்து மாதர் உடலாலிட்ட (பரவசமாகிய)
|