வரியரவல்குன் மடந்தையொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயினதூவி
விகிர்தனசேவடி சேர்வோம். 9
435. குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற்
கொள்கையினார் புறங்கூற
வெண்டலையிற்பலி கொண்டல்
விரும்பினையென்று விளம்பி
வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கண் மாமலர்தூவத்
தோன்றிநின்றானடி சேர்வோம். 10
__________________________________________________
ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை
உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய
பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை
ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர்
இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு
விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.
கு-ரை: மால் அயன் இருவர்க்கும் அறியலாகாவிகிர்தன்
அடிசேர்வோம் என்கின்றது. கரியவன் - திருமால்; கரியவன்
சாரலும், நான்முகன் காணலுமாகா எனக் கூட்டுக. எரியுரு
- அக்னிமலையின் வடிவு. வரி யரவு - பொறிகளோடு கூடிய
பாம்பின் படம். விகிர்தன - சதுரப்பாடுடையவனது.
10. பொ-ரை: கொழுத்த அமணர்களும்,
துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு
வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை
விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள்
மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு
பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று
அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக்
காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.
கு-ரை: அமணர் புறங்கூற, பிச்சையேற்பவன்
என்றுகூறி மலர்தூவ நின்றான் அடி சேர்வோம் என்கின்றது.
புறச்சமயத்தார்.
|