436. கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங்
கரைபொரு காழியமூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும்
வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லியபாடல்கள் வல்லார்
துயர்கெடுதல்லெளி தாமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
பொருந்தாதன கூறவும், நம்போல்வார்க்கு
வெளிப்பட்டு அருள்செய்யும் அண்ணலாதலின் அடிசேர்வோம்
என்றார். துவர்க்கூறை - மருதந் துவர் தோய்த்த ஆடை.
11. பொ-ரை: மலைபோல உயர்ந்து வரும்
அலைகளை உடைய பெரிய கடல், பெரிய கரையோடு மோதி
முழங்கும் காழிப்பழம்பதியில் தோன்றிய, உயர்ந்த
நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன்,
வலிதாக உயர்ந்த சூலம், வெண்மையான மழு, வாள் ஆகியவற்றைப்
பயன்படுத்துவதில் வல்லவனாகிய சிவபிரான்
விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப் போற்றிச்
சொல்லிய. பாடல்களை ஓத வல்லவர் துயர் கெடுதல் எளிதாம்.
கு-ரை: பாடல்வல்லார் துயர்கெடுதல்
எளிதாம் என்கின்றது கல்லுயர் மாக்கடல் - மலைபோலத்
திரையுயர்ந்துவரும் கரிய கடல் வல்லுயர் சூலம் - வலிய
உயர்ந்த சூலம். துயர்கெடுதல் எளிதாய் என்றது வாதநோய்க்குச்
சரபசெந்தூரம் போலப் பிறவித்துயருககுச் சிறந்த
மருந்தாதலின் எளிதாம் என்றவாறு.
திருப்பெருந்துறைப் புராணம்
பாலள வின்னா ளுண்டரன் றொறுவியர்ப்
பார்த்துவந்த
மாலள வின்னாண்கொள்ள வண்பாலோர்சிறுபோழ்துண்டான்
மேலள வுலகின்றாளை விமலனைக் கண்டுகாட்டி
நூலள ஒருநூல்சொற்ற நோன்மையால் தொழுதுவாழ்வாம்.
- மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
|
|