41. திருப்பாம்புரம்
பதிக வரலாறு:
ஆக்கூர் தான்தோன்றிமாடத்து இறைவனை
வணங்கிப் பதிகம் பாடிப் போற்றி, வழியிலுள்ள பிறதலங்களையும்
வணங்கிக் கொண்டு திருமீயச்சூரை அடைந்த
பிள்ளையார், அங்கும் அவ்வாறு பணிந்தெழுந்து, திருப்பாம்புரம்
சென்று சேர்ந்தார்கள். பாம்புரநாதரைப் பதிக இன்னிசையால்
பாடத் திருவுளம்பற்றி, ‘சீரணி திகழ்’ என்னும் இப்பதிகத்தை
யருளிச் செய்தார்கள்.
பண்: தக்கராகம்
பதிக எண்: 41
திருச்சிற்றம்பலம்
437. சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர்
திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர்
மான்மறியேந்திய மைந்தர்
காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல்
கண்ணுதல் விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தரு நான்மறையாளர்
பாம்புர நன்னகராரே. 1
__________________________________________________
1. பொ-ரை: விண்ணவர் போற்றும் திருப்பாம்புர
நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும்
அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை
எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய
உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும்
திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய
புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.
கு-ரை: பாம்புர நன்னகரார் இயல்புகள்
இவை என்கின்றது. சீர் அணி திகழ் - புகழ் அழகு இவைகள்
விளங்கும் செல்வர் என்றது தம்மையிலிருந்து ஓன்றையும்
ஏவாதே, இருந்தநிலையில் இருந்தே
|