438. கொக்கிறகோடு கூவிளமத்தங்
கொன்றையொ டெருக்கணிசடையர்
அக்கினொடாமை பூண்டழகாக
அனலதுவாடுமெம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும்
விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார்
பாம்புர நன்னகராரே. 2
439. துன்னலினாடை யுடுத்ததன்மேலோர்
சூறைநல்லரவது சுற்றிப்
பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப்
பித்தராய்த்திரியுமெம் பெருமான்
__________________________________________________
விளைக்கப்பெற்ற வீரச்செல்வத்தையுடையவர்.
வார் - கச்சு. மான்மறி - மான்குட்டி. கார் அணி மணி
திகழ் மிடறு - கரிய அழகிய நீலமணி போலும் மிடறு.
2. பொ-ரை: திருப்பாம்புர நன்னகர்
இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ,
கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த
சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு
அழகாக அனலின்கண் ஆடும் என் தலைவர் மிக்க நல்ல
வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள்
தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும்
வருபவர்.
கு-ரை: இதுஅவருடைய அணிகளை அறிவிக்கின்றது
கொக்கிறகு - ஒருவகைப்பூ; கொக்கின் இறகுமாம், கூவிளம்
- வில்வம் மத்தம் - ஊமத்தம்பூ. அக்கு - சங்குமணி. வேதவேள்வி
- வைதிகயாகம். விரை -மணம்.
3. பொ-ரை: திருப்பாம்புர நன்னகர்
இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்து அதன் மேல்
காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச்
சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ
விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது
பெருமான், அவர்மணம் நிறைந்த சிறந்த மலர்களைத்
தூவி நாளும் நாம் வழிபட மலையரசன்
|