மன்னுமாமலர்கள் தூவிடநாளும்
மாமலையாட்டியுந் தாமும்
பன்னுநான்மறைகள் பாடிடவருவார்
பாம்புர நன்னகராரே. 3
440. துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச்
சுடர்விடுசோதியெம் பெருமான்
நஞ்சுசேர்கண்ட முடையவென்னாதர்
நள்ளிருள்நடஞ்செயுந் நம்பர்
மஞ்சுதோய்சோலை மாமயிலாட
மாடமாளிகைதன்மே லேறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர்பயிலும்
பாம்புர நன்னகராரே. 4
__________________________________________________
மகளாகிய பார்வதியும், தாமுமாய்ப்
புகழ்ந்து போற்றும் நான் மறைகளை அடியவர்
பாடிக்கொண்டு வர, நம்முன் காட்சி தருபவர்.
கு-ரை: கோவணமுடுத்துப் பாம்பைச்
சுற்றிச் சடைதாழ நின்றாடும் பித்தர்; அன்பர்கள்
மலர்தூவி வழிபட உமையும் தானும் வருவார்; அவரே
பாம்புரநகரார் என்கின்றது. துன்னலின் ஆடை - கோவண
ஆடை. சூறை நல் அரவு - காற்றையுட்கொள்ளும் பாம்பு.
4. பொ-ரை: மேகங்கள் தோயும் சோலைகளில்
சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி,
செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை
உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர
நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாதவராய், தோற்றமும்
இல்லாதவராய், ஒளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த்
திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை
உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும்
கடவுளாவார்.
கு-ரை: இறப்பு பிறப்பு இல்லாத சோதியாய்,
சர்வசங்கார காலத்து நள்ளிருளில் நட்டமாடும் நம்பர்
இவர் என்கின்றது.
துஞ்சுநாள் துறந்து - இறக்கும்நாள் இன்றி.
நள் இருள் - நடுஇரவு. நம்பர் - நம்பப்படத்தக்கவர்.
மஞ்சு - மேகம். பஞ்சுசேர் - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற.
|