441. நதியதனயலே நகுதலைமாலை
நாண்மதிசடைமிசை யணிந்து
கதியதுவாகக் காளிமுன்காணக்
கானிடைநடஞ்செய்த கருத்தர்
விதியதுவழுவா வேதியர்வேள்வி
செய்தவரோத்தொலி யோவாப்
பதியதுவாகப் பாவையுந்தாமும்
பாம்புர நன்னகராரே. 5
442. ஓதிநன்குணர்வார்க் குணர்வுடையொருவ
ரொளிதிகழுருவஞ்சே ரொருவர்
மாதினையிடமா வைத்தவெம்வள்ளல்
மான்மறியேந்திய மைந்தர்
ஆதிநீயருளென் றமரர்கள்பணிய
அலைகடல்கடையவன் றெழுந்த
பாதிவெண்பிறைசடை வைத்தவெம்பரமர்
பாம்புர நன்னகராரே. 6
__________________________________________________
5. பொ-ரை: விதிமுறை வழுவா வேதியர்கள்,
வேள்விகள் பல செய்தலால், எழும் வேத ஓலி நீங்காதபதி
அது என உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில்
விளங்கும் இறைவர், சடைமுடி மீது கங்கையின் அயலே
சிரிக்கும் தலைமாலை, பிறை மதி ஆகியவற்றை அணிந்து
நடனத்திற்குரிய சதி அதுவே என்னும்படி காளிமுன்னே
இருந்து காண இடுகாட்டுள் நடனம் செய்த தலைவர் ஆவார்.
கு-ரை: தலையில் கங்கை, கபாலம்,
பிறை முதலியன அணிந்து காளியோடு நடனமாடிய நாதர்
இவர் என்கின்றது. நதி - கங்கை. நகுதலை - உடலைச்
சதம் என்றிருக்கின்ற பிறரைப் பார்த்துச்
சிரிக்கின்ற தலை. கதியதுவாக - நடனகதி அதுவாக.
கான் - இடுகாடு ஓத்துஓலி - வேத ஓலி. ஓவா - நீங்காத.
6. பொ-ரை: திருப்பாம்புர நன்னகர்
இறைவர், கல்வி கற்றுத் தெளிந்த அறிவுடையோரால்
அறியப்படும் ஓருவராவார். ஓளியாக விளங்கும் சோதி
உருவினராவார். உமையம்மையை இடப் பாகமாகக் கொண்ட
எம் வள்ளலாவார். இளமான் மறியைக் கையில் ஏந்திய
மைந்தராவார். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது
எழுந்த ஆலகால
|