பக்கம் எண் :

 41. திருப்பாம்புரம்571


443. மாலினுக்கன்று சக்கரமீந்து

மலரவற்கொருமுக மொழித்து

ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி

யனலதுவாடுமெம் மடிகள்

காலனைக்காய்ந்து தங்கழலடியாற்

காமனைப்பொடிபட நோக்கிப்

பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள்

பாம்புர நன்னகராரே. 7

__________________________________________________

விடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதியாக விளங்கும் தலைவனே, நீ எம்மைக் காத்தருள் என வேண்ட, நஞ்சினை உண்டும், கடலினின் றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும் அருள்புரிந்த எம்மேலான தலைவராவார்.

கு-ரை: ஓதியுணர்வார்க்கு ஞானமாக இருக்கும் நாதனாகிய பிறைசூடிய பெருமான் இவர் என்கின்றது. உணர்தல் - கல்வியைத் துணையாகக்கொண்டு கற்றுத் தெளிந்து அறிதல். உணர்வுடை ஒருவன் - உணரத்தக்க ஒப்பற்றவன். ஒளிதிகழ் உருவம் - ஒளியாக விளங்கும் சோதியுருவம். வள்ளல் என்றது சத்தியொடு கூடிய வழியே சிவம் கருணையை மேவி வள்ளன்மை பூணுதலின். ஆதி - முதலுக்கெல்லாம் முதற்பொருளாய் இருப்பவன். கடலில் எழுந்த பொருள்கள் ஆகிய இலக்குமி, விஷம், பிறை, உச்சை சிரவம், கௌத்துவம் முதலிய பொருள்களில் ஒன்றாகிய பிறை.

7. பொ-ரை: திருப்பாம்புர நன்னகர் இறைவர் முன்பு திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் பிரமனது ஐந்தலைகளில் ஓன்றைக் கொய்தவர். சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர். தீயில் நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர். காமனைப் பொடிபட நோக்கியவர். உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்த தலைவர் ஆவார்.

கு-ரை: இது வீரச்செயலை விளக்குகின்றது. சக்கரமீந்தது தீருவீழிழலையில் நடந்த செய்தி; ஒருமுகம் ஓழித்தது திருக்கண்டியூர்ச்செய்தி; காலனைக்காய்ந்தது கடவூர்ச்செய்தி; காமனை எரித்தது குறுக்கைச்செய்தி. நால்வர் - சனகாதியர். அறம் - சிவாநுபவத் திறம். பாலன் - உபமன்யு.