பக்கம் எண் :

572திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


444. விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க

மெல்லியதிருவிர லூன்றி

அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக

ளனலதுவாடுமெம் மண்ணல்

மடக்கொடியவர்கள் வருபுனலாட

வந்திழியரிசிலின் கரைமேல்

படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும்

பாம்புர நன்னகராரே. 8

445. கடிபடுகமலத் தயனொடுமாலுங்

காதலோடடிமுடி தேடச்

செடிபடுவினைக டீர்த்தருள்செய்யுந்

தீவணரெம்முடைச் செல்வர்

முடியுடையமரர் முனிகணத்தவர்கள்

முறைமுறையடிபணிந் தேத்தப்

படியதுவாகப் பாவையுந்தாமும்

பாம்புர நன்னகராரே. 9

__________________________________________________

8. பொ-ரை: இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக் கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப் போற்ற அருள் பல செய்த தலைவர் ஆவார்.

கு-ரை: கைலையையசைத்த இராவணனை வலியடக்கிய அடிகள், அரிசிலாற்றங்கரையில் பருமணி சிதறும் பாம்புர நகரார் என்கின்றது. விடைத்த - செருக்குற்ற. அடர்த்து - நெருக்கி அடர்த்து அருள்செய்த என்றது மறக்கருணையும் அறக்கருணையும் காட்டி ஆட்கொண்டது. அனல் - ஊழித்தீ. அரிசிலின் கரைமேல் (புனல்) மணிசிதறும் நகர் எனப் பொருள் முடிக்க. படப்பை - தோட்டம்.

9. பொ-ரை: முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி